1. வாழையின் ஃப்யூசேரியம் வாடல் நோய் (Fusarium Wilt)
நோய்க்காரணி : ஃப்யூசேரியம் ஆக்ஸிபோரம் வகை கியூபென்சி (Fusarium Oxysporum f.s.p Cubense)
பூசண இழைகள் வெண்மையாகவோ, சாம்பல் நிறமாகவோ இருக்கும். பாதிக்கப்பட்ட பருத்தியின் வேர்த்திசுவறைகளக்கிடையேயும் திசுவறைக்குள்ளும் இப்பூசண இழைகள் வளர்ந்திருக்கும். பூசண இழைகளிலிருந்து ஸ்போரோடோக்கியா (Sporodochia) என்னும் பூசண வித்துக்கள் தோன்றுகின்றன. இவை 20-30 மைக்கிரான் விட்ட அளவில் இருக்கும். இவற்றிலிருந்து நேர்மேலாக 70 மைக்கிரான் நீளமுடைய தூள் வித்துத் தண்டுகள் உண்டாகின்றன. இப்பூசணத்தில் நுண் தூள் வித்துக்கள், பெரிய தூள் வித்துக்கள், இழை வித்துக்கள் என மூன்று வகை பூசண வித்துக்கள், உண்டாகின்றன. இவற்றுள் நுண்தூள் வித்துக்கள் ஒற்றை திசுவறைகளையோ இரட்டை திசுவறைகளையோ கொண்டும், முட்டை வடிவத்திலும் 5-7-2-5-3 மைக்கிரான் அளவிலும் இருக்கும். பெரிய தூள் வித்துக்கள் கருக்கு அரிவாள் வடிவத்தில் 3 குறுக்குச் சுவர்களைக் கொண்டு 22-36X4.5 மைக்கிரான் அளவில் இருக்கும். இழை வித்துக்கள் முட்டை வடிவிலும் பெரும்பாலும் இரட்டை இரட்டையாவும் தென்படுகின்றன.
அறிகுறிகள்
- இந்நோய் 2 முதல் 5 மாத வயதுள்ள மரங்களை அதிகமாக தாக்குகிறது. இந்நோயினால் முதன் முதலில் அடியிலுள்ள முதிர்ந்த இலைகளின் இலைக்காம்புகள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். பின்பு மஞ்சள் நிறம் இலைகளுக்கும் பரவி அதிகரித்து இலைக் காம்புகள் ஒடிந்து விடுகின்றன. சிலவகை வாழைகளில் இலைகள் எந்த வித நிறமாற்றமும் அடையாமல் இலைக் காம்புகள் முறிந்துவிடும்.
- நோயுற்ற வாழையின் ஏனைய இலைக் காம்புகளும் ஒடிந்து மேல் குருத்து மட்டும் நேராக நீட்டிக் கொண்டு இருக்கும், அடுத்து அடுத்து வெளிவரும் இலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாகவும் சுருண்டும் காணப்படும்.
வாழைக் கன்றுகளில் குருத்து விரியாமல் மஞ்சள் நிறமாகி வாடி விடுகின்றது.
- வாழைத்தண்டு நீளவாக்கில் பிளந்து காணப்படும். சில சமயம் இந்த அறிகுறி தெரியாது. இலைக் காம்புகளில் மஞ்சள் நிறக்கோடுகள் காணப்பட்ட 4 அல்லது 5 வாரங்களில் மரங்கள் காய்ந்து இறந்து விடுவதைக் காணலாம். வாழை கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் சாற்றுக்குழாய் திசுக்கள் கருமை நிறமாக மாறி இருப்பதைக் காணலாம்.
- இவ்வாறு சாற்றுக் குழாய்களில் இப்பூசணம் வளர்ச்சி அடைந்து அடைத்துக் கெரள்வதால் தண்ணீரும் ஊட்டச் சத்துக்களும் வேரில் இருந்து மற்ற பாகங்களுக்குச் செல்ல இயலாமல் தடுக்கப்பட்டு வாழை காய்ந்துவிட ஆரம்பிக்கிறது. இதனால் இந்நோயை வாடல்நோய் என அழைக்கிறோம்.
- வாழைக் கிழங்கு அதில் உள்ள வேர்கள் ஆகியவற்றின் சாற்றுக் குழரய்களும் பூசணத்தினால் கரும் பழுப்பு நிறமாக மாறி விடுகின்றன.
 |
மைய அழுகல் நோய்
|
சிக்கடோக்கா இலைப்புள்ளி நோய்
|
|
பரவுதல்
- இந்நோய் மண்மூலம் பரவுகிறது. இந்நோயை உண்டாக்கும் பூசணம் காயமுற்ற வாழைக் கிழங்கின் மூலமும், வேரின் மூலமும் உட்புகுகின்றன. இவை சாற்றுக் குழாய்களில் வளர்ந்து பெருகி பூசண விதைகளை வெளியிடுகின்றன.
- பூசண விதைகள் மண், வாழைக்கிழங்கு, காய்ந்த வாழைச் சருகுகள் ஆகியவற்றில் வாழ்கின்றன. நூற்புழுக்கள், பூச்சிகளினால் வேரில் ஏற்படும் காயங்கள் மூலம் இப்பூசண விதைகள் எளிதாக வாழையின் உட்திசுக்களை அடைகின்றன.
- நோயுற்ற வாழையின் கன்றுகளை நடுவதாலும், நோயுற்ற வாழையின் வேரோடு அடுத்துள்ள வாழைகளின் வேர்கள் பின்னி வளர்வதாலும் நேரய் பரவுகிறது.
கட்டுப்பாடு
- வளமான, சிறிது கார குணமுடைய மண் வகைகளில் நல்ல வடிகால் வசதிகள் செய்து கரும்புச் சக்கையை பரப்பி, யூரியா உரமிடுதல் வாழையை இந்நோயிலிருந்து காப்பாற்ற சிறந்த வழியாகும்.
- இந்நோய் மண் மற்றும் நோயுற்ற வாழையின் சருகுகளால் பரவுவதால் வாழைத் தோட்டத்தை சுத்தமாக வைத்து இருப்பது நல்லது. நோயில்லாத வாழைக் கன்றுகளை நடுதல் சாலச் சிறந்ததாகும்.
- ஆறுகள் அல்லது வாய்க்கால்கள் அருகாமையில் இருந்தால் அதன் போக்கை மாற்றி தோட்டத்தில் நீர் நிரப்பி வடித்து 6 மாத காலம் வேறு பயிர் செய்யாமல் காய விட்டால் நேரய்க்கிருமிகள் வாழ்விழந்து தோட்டம் தூய்மையாக்கப்படும்.
- ரஸ்தாளி, மொந்தன், சிறுமலை, நெய்வண்ணன், சிராஸ்மைக்கேல் ஆகிய வாழை ரகங்களை இந்நோய் வெகுவாக பாதிக்கின்றன. பூவன், நெய்பூவன், பச்சை வாழை, மூங்கில் , பேய்லாடன், நேந்திரன் போன்ற வகைகள் சற்று நோயைத் தாங்கும் சக்தி பெற்றவை.
- இந்நோய்க்கு இலக்காகும் வாழைக் கன்றுகளை 0.05 சத கார்பெண்டாசிம் கரைசலில் நனைத்து நடலாம். கார்பெண்டாசிம் 0.05 சத மருந்துக் கரைசலை நோயுற்ற வாழை மரத்தைச் சுற்றிலும் மண்ணில் தெளித்தல் நல்லது.
- நோய் முற்றிய மரத்தை கிழங்கோடு தோண்டி எடுத்து எரித்தல் நோய் மேலும் பரவுவதைத் தடுக்க உகந்த வழியாகும். நோய் காணும் குழியில் சுண்ணாம்பை குழிக்கு 1.2 கிலோ வீதம் போட்டு ஆற விடவும். பனாமா வாடல் நோயை கிழங்கில் மருந்தை உட்செலுத்தி தடுத்திடலாம்.
- இதற்கு 3 மில்லி 2% கரர்பெண்டாசிம் கரைசலை 450 கோணத்தில் கிழங்கில் 10 செ.மீ ஆழத்தில் ஊசி மூலமாக உட்செலுத்த வேண்டும். இம்முறையில் மருந்திட்ட ஒரு மாதத்திற்கு பின்பும் ஊசிமூலம் மேற்கூறிய மருந்தையே இடவேண்டும்.
2. வாழையின் மோக்கோ வாடல் நோய் (Moko Wilt)
நோய்க்காரணி : ஸ்குடோமோனஸ் சொலனேசியாரம்
அறிகுறிகள்
- ஆரம்பத்தில் வாழை மரத்தில் உட்புறமுள்ள இலைகளின் அடிப்பாகம் மஞ்சளாக மாறுகின்றது. இவ்வாறான இலைகள் நாளடைவில் காய்ந்து விடுகின்றன. குருத்து மட்டும் சில நேரங்களில் தாக்கப்படாமல் இருக்கலாம்.
- கேவேண்டிசு (Cavendish) வகையில் சிறிது மாறுபாடான அறிகுறியைக் காணலாம். இவ்வகையில் நீர்ப் பற்றாக் குறையினால் இலைகள் மஞ்சளாதல் போல் அடிப்பாகத்திலுள்ள இலைகள் மாறலாம். நாளடைவில் மங்கலான வெளிர் மஞ்சள் நிறம் பெற்று இலைகள் காய்ந்து விடுகின்றன. இலைக்காம்புகள் ஒடிந்து மரத்தின் தலைப்பாகத்தைச் சுற்றிலும் இலைகள் தொங்கிக் கெரண்டிருப்பதைக் காணலாம்.
- நோய்க்கு இலக்கான வாழை மரங்களைச் சுற்றிலும் உள்ள வாழைக் கன்றுகளை நடப் பயன்படுத்தினால் குருத்துக்கள் காய்ந்து பின் வாழைக் கன்றுகள் யாவும் காய்ந்து விடுகின்றன.
- இந்நோய் சாற்றுக்குழாய் சார்ந்ததாகும். நோய் கண்ட வாழை மரத்தின தண்டுப்பாகத்தை வெட்டிப் பார்த்தால், சாற்றுக் குழாய்த் தொகுதிகள் (Vascular Bundles) யாவும் நிறமாற்றமடைந்திருப்பது தெரியும். அவை வெளிர் மஞ்சள் அல்லது கரும் பழுப்பு அல்லது கருநீல நிறத்தில் காணப்படலாம்.
- வாழைக்கிழங்கின் (வாழைமுட்டி) சாற்றுக் குழாய்த் தசைப் பாகத்தில் செம்பழுப்பு நிற வளையமும் காணப்படும். தாக்கப்பட்ட பாகங்களை வெட்டிப் பார்த்தால் அப்பாகங்களில் இருந்து வெளிர்பழுப்பு நிற நீர் கசிந்து கொண்டிருக்கும். அதில் எண்ணற்ற பேக்டீரியா அடங்கியிருக்கின்றன.
- கிழங்கு பாகத்திலோ தண்டு பாகத்திலோ அழுகிய பகுதிகள் காணப்படுகின்றன. பெரிதாக வளர்ந்த வாழை மரங்கள் நோயினால் தாக்கப்பட்டால் இலை வெளுத்தல், காம்பு ஒடிந்து தொங்குதல் போன்ற வெளிப்படையான அறிகுறிகள் காணப்படுவதில்லை. ஆயினும் வாழைக் காய்களில் எளிதில் அறிகுறிகளைக் காணமுடியும்.
- காய்கள் சிறுத்து விடுகின்றன. காய்களை குறுக்காக வெட்டிப் பார்த்தால் அப்பாகங்கள் கரும்பழுப்பு நிறமாகக் காணப்படுகின்றன. நாளடைவில் அவை கருமை நிறமாக மாறுகின்றன.
- இந்நோயின் வெளிப்படையான அறிகுறிகள் பூசத்தினால் ஏற்படும் பனாமா வாடல் (Panama Wilt) நோயின் அறிகுறிகளைப் போலவே பெரும்பாலும் தென்படுகின்றன. ஆயினும் இரண்டு நோய்களையும் எளிதில் வேறுபடுத்தி உணர முடியும்.
- இந்நோயினால் தாக்கப்பட்ட வாழை மரங்களில் தோன்றும் காய்களை வெட்டிப் பார்த்தால் உட்பாகம் நிறமாற்றமடைந்து கரும்பழுப்பு நிறமாகவோ கருமையாகவோ காணப்படுவதை அறியலாம். வெட்டிய பாகத்திலிருந்து பேக்டீரியக் கசிவு ஏற்படும்.
- இவ்வாறான அறிகுறிகள் பனாமா வாடல் நோயினால் தாக்கப்பட்ட மரங்களிலுள்ள காய்களில் தோன்றுவதில்லை. இவற்றுடன் கிழங்குகள், தண்டுப்பாகம் போன்றவை அழுகல், காய்கள் முதிருமுன் பழுத்தல், காய்கள் ஒழுங்கற்ற வடிவத்தை அடைதல், காய்களில் வெடிப்புகள் ஏற்படல், பெரும்பாலும் குருத்துப் பாகத்தை ஒட்டியுள்ள இலைகள் முதலிலும் பின்பு வெளிப்புறமுள்ள இலைகள் ஒவ்வொன்றாகத் தாக்கப்பட்டு இலைக்காம்பு ஒடிந்து தொங்குதல் போன்ற மோக்கோ நோயினால் ஏற்படும் பிற அறிகுறிகளிலிருந்தும் எளிதில் வேறுபடுத்தி நோயினை உறுதி செய்யலாம்.
பரவுதல்
பொதுவாக மரங்களில் ஏற்படும் காய்கள் வழியாக எளிதில் நோயினைத் தோற்றுவிக்கும் பேக்டீரியா பரவுகின்றன. நோயுற்ற மரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் கருவிகள் வாயிலாகவும் பரவுகின்றன. வாழைப் பூக்களை நாடிச் செல்லும் பூச்சிகள் மூலமாகப் பரவுவதற்கும் வாய்ப்புண்டு. நோய் கண்ட மரங்களின் வேர்களுடன் அடுத்துள்ள மரங்களின் வேர்கள் தொடர்புற்றால் அம்மரங்களுக்கும் பேக்டீரியா பரவுகின்றன. நோய் பரவியுள்ள வாழைத் தோட்டங்களிலிருந்து எடுத்து நடப் பயன்படுத்தும் வாழைக்கன்றுகள் மூலமாகப் பிற இடங்களுக்கும் எளிதில் இந்நோய் பரவுகின்றது. நீர் தேங்கி நிற்கும் இடங்களில் வளர்க்கப்படும் வாழை மரங்கள் எளிதில் இந்நோய்க்கு இலக்காகின்றன.
கட்டுப்பாடு
வளர்ப்பு முறை :
- நோய் பரவியுள்ள தோட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகளில் நோயினை உண்டாக்கும் பேக்டீரியா ஒட்டியிருக்கலாமாதலால் அவற்றை உடனடியாக நோய் காணாத வாழை மரங்களுடன் தொடர்புபடுத்தக் கூடாது. நீர் தேங்கி நிற்பதைத் தவிர்ப்பதற்காக வடிகால் வசதியைப் பெருக்க வேண்டும்.
- நோயினால் தாக்கப்பட்ட இடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைப் பெற்று நடப் பயன்படுத்தலைத் தவிர்க்க வேண்டும்.
- நோயுற்ற மரங்களை அப்போதைக்கப்போது தோண்டியெடுத்து எரித்து விட வேண்டும். நோயுற்ற அம்மரங்களை அகற்றுவதுடன் அவற்றைச் சுற்றிலும் உள்ள மரங்களையும் அகற்றி விடுவதால் மண்ணிலிருக்கும் நோய்க்கிருமிகள் அடுத்துள்ள மரங்களின் மூலம் பெருக்கமடைவதைத் தடுக்கலாம்.
- மண் ஈரமில்லாமல் உலர்ந்தால் இந்நோயினை உண்டாக்கும் பேக்டீரியா மண்ணிலிருந்து அழிக்கப்படுகின்றன. எனவே நோய் காணப்பட்ட நிலத்தை கோடைகாலத்தில் அடிக்கடி உழுதுவிடுதல் மண்ணிலுள்ள பேக்டீரியா அழிவதற்கு வழி வகுக்கும்.
- வாழைக்கனலயில் காய்கள் தோன்றியபின் வாழைப்பூக்களை ஓடித்து விடுவதால் பூக்களை நாடிவரும் பூச்சிகளின் வருகை தவிர்க்கப்படுகிறது. எனவே பூச்சிகளால் நோய் பரவுதல் தடுக்கப்படுகிறது. இந்நோய் தோன்றும் மாற்றுப் பயிர்களைக் களைந்தெறிதல் வேண்டும்.
- இந்நோயினால் தாக்கப்படாத பயிர்களை இடையிடையே பயிரிடுவது மண்ணில் நோய்க்கிருமி பெருகுவதைக் கட்டுப்படுத்தும். சோளம் போன்ற பயிர்களை வளர்ப்பதால் மண்ணில் நோய்க்கிருமிகள் பெருக்கம் தடைப்படுகின்றது.
எதிர்ப்புத்திறன் கெரண்ட வகைகள்:
பயிரிடப் பயன்படுத்தும் வாழை வகைகள் யாவும் இந்நோயினால் தாக்கப்படுகின்றன. ஆயினும் பெரிய கேவெண்டிசு (Giant Cavendish), லகாடன் (Lacatan), வாலெரி (Valery) போன்ற வகைகளை இந்நோய் மிகுதியாகத் தாக்குவதில்லை.
இயைபியல் முறை:
- களைக்கொல்லிகளான 2, 4-டி (2இ 4-D) போன்றவற்றை பயன்படுத்தி நோய் கண்ட மரங்களை அழிக்கலாம். கன்றுகளைக் களைதல், இலைகள் அறுத்தல், குலைகள் வெட்டுதல், குறுத்து வெட்டுதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும், தொற்று நீக்கிகளாகப் பார்மலின், பீனால் (Pheonl) போன்றவை பயன்படுகின்றன.
- கருவிகளைப் பார்மலின் (Formalin) 10 விழுக்காடு அடர்த்தியில் 10 மணித்துளிகள் அல்லது பீனால் 5 விழுக்காடு அடர்த்தியில் 30 மணித்துளிகள் அல்லது பீனால் 5 விழுக்காடு அடர்த்தியில் 30 மணித்துளிகள் நனைத்து வைத்திருப்பதன் மூலம் அக்கருவிகளிலுள்ள் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
- நோய் கண்ட மரங்களைக் களைந்தபின் அக்குழிகளில் பார்மலின், பீனால் போன்றவற்றை மேற்கூறியபடி நீரில் கலந்து ஊற்றுவதுடன் சுற்றியுள்ள மரங்களின் தூர்களைச் சுற்றிலும் ஊற்றி மண்ணை நனைப்பது நோய் பரவுதலை ஓரளவு கட்டுப்படுத்தும்.
 | அறிகுறிகள்:
- இந்நோயின் தாக்கத்தினால், அடி தண்டு மற்றும் மேல் தண்டு பகுதிகளும் பாதித்து அழுகிவிடும்
- கோடைக் காலங்களில் இள வாழை நாற்றுக் கன்றுகள் எளிதில் நோய் பாதித்துவிடும்
|
கட்டுப்பாடு:
- நோயில்லாத குமிழ் தண்டுகளை நடவும்
- நோய் பாதித்தக் கன்றுகளை அகற்றி அழித்து விடவும்
- மீத்தாக்ஸி எத்தில் மெர்க்யூரிக் க்லோரைட் (எமிசன் – 6) 0.1 அல்லது சோடியம் ஹெப்போக்ளோரைட் – 10% அல்லது பிளிசிங் பவுடர் 20 கி என்ற அளவில் கன்றுகளை நனைத்து வைக்க வேண்டும்
|
| அறிகுறிகள்:
- வாழை இலைகளில் மஞ்சள் நிறத்திலோ அல்லது பழுப்புப் பச்சை நிறத்தில் கோடுகள் போன்று காணப்படும். பின் பழுப்பு நிறப் புள்ளிகள் கருமை நிறத்தில் மாறி அடர் பழுப்பு நிறத்துடனும் காணப்படும் மற்றும் மஞ்சள் நிறத்தில் குழி படிந்தது போல் காணப்படும். இந்தக் கோடுகள் பெரியதாக தோன்றி பரவிவிடும்.
- பாதிக்கப்பட்ட வாழை இலைகளில் கரும் பூஞ்சான் குழிகள் காணப்படும். வேகமாக இலை வாடி, உதிர்ந்துவிடும்
|
|
| கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட வாழை இலைகளை அகற்றி மற்றும் அழித்து விடவும்
- ப்ரோபிகோனசூல், கார்பேன்டாஸிம் – 0.1% அல்லது க்லோரோதினாயில் 0.25%, டிபாயில் அல்லது சான்டோவிட் – 1 மி.லி, 1லி தண்ணீரில் இவைகளை கலந்து தெளிக்க வேண்டும்.
|
5.ஆன்தராக் நோஸ்
அறிகுறிகள்:
- பழத்தின் நுனியில் உள்ள நோய் பகுதிகள் கருமை நிறத்தில் மாறி சுருங்கிவிடும்
- பூஞ்சான் வித்துகள் அதிகரித்து, இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்
- பழங்கள் மற்றும் குழைகளில் மிகுதியாக நோய் பாதிக்கப்பட்டு இருக்கும். சில சமயங்களில் குழையின் தண்டுப் பகுதி நோய் பாதிப்படைந்திருக்கும். நோய் பாதித்த தண்டு பகுதிகள் கருமை நிறத்தில் மாறி அழுகிவிடும்.
- வட்ட வடிவமான கோனிடியோஸ்போர்ஸ், நிறமற்று, பிரிவுற்று மற்றும் கிளைகளுடன் அசர்வோலி உறுவாக்குகின்றன. கொனிடியா நிறமற்று, பிரிவின்றி வட்ட வடிவத்திலிருந்து நீல் வட்ட வடிவத்திலிருக்கும்
கட்டுப்பாடு:
- கார்பென்டஷிம் – 400 பிபிஎம் அல்லது பென்னோமைல் – 1000பிபிஎம் அல்லது ஆயூரபூஞ்சான் – 100பிபிஎம் அளவில் அறுவடை செய்த பழங்களை கலவைகளால் தெளிக்கவும்.
6. கரும் புள்ளி நோய் அறிகுறிகள்:
- இலைகள் மற்றும் பழங்களில், பழுப்பு நிறப் புள்ளிகளால் பாதிக்கப்பட்டவை நடுப்பகுதியில் கருமை நிறப் புள்ளியுடன் காணப்படும்
- பழங்களில் பாதித்த நுண்ணுயிரி தோல் முழுவதும் பரவி தன் கட்டுப்பாட்டிலிருக்கும்.
- பூஞ்சான் வித்துகள் கருப்பாக இருக்கும். கோனிடியோஸ்போர்ஸ், எளிதாகவும் குட்டையாகவும், நீளமாகவும் காணப்படும்
- கொனிடியா, இரண்டு வரியுடன் ஒற்றை அறையுடன் இருக்கும்
- சிதைந்து பாதிக்கப்பட்ட செடிகளில் பூஞ்சான் உயிர் வாழும். கொனிடியா மழை நீரிலும் மற்றும் காற்றின் மூலமும் பரவக்கூடும்.
கட்டுப்பாடு:
காப்பர் ஆக்ஸிக்ளோரைட் 0.25%, டிப்பியில் அல்லது சன்டோவிட் – 1 மி.லி அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
7. வாழையின் முடிக்கொத்து நோய் (Bunchy Top Disease)
நோய்க்காரணி : வாழை நச்சுயிரி - 1 ( Banana mosaic virus -1)
 | அறிகுறிகள்
- முடிக்கொத்து நோயின் அறிகுறி முதலில் இலைகளில் தென்படும். மரத்தின் எல்லரப் பருவத்திலும் இந்நோயின் அறிகுறியைக் காணலாம்.
- இந்நோயின் தாக்குதல்கள் இருநிலைகளில் காணப்படும். இந்நோயின் தாக்குதல்கள் இருநிலைகளில் காணப்படும்.
- அவை முதல் நிலைத் தொற்று (Primary infection) இரண்டாம் நிலைத் தொற்று (Secondary infection) என்பன.
- முதல் நிலையில் தாக்கப்பட்ட மரங்களில் நச்சுயிரி மரத்தின் கிழங்குகளில் காணப்படும் மரம் முழுவதும் ஊடுருவிச் செல்லும் (Systemic) திறம் பெற்றது.
- நோயுற்ற வாழைக் கிழங்கின் எல்லாப் பகுதிகளிலும் நச்சுயிரி பரவியிருக்கும். கடுமையாகத் தாக்கப்பட்ட கிழங்கிலிருந்து வளரும் மரம் 60 செ.மீ நீளத்தைக் கூட அடைவதில்லை.
- இவ்வாறு நோயுற்ற மரம் குலை தள்ளுவதுமில்லை. நோயுற்ற மரம் விரைவில் காய்ந்து விடுகின்றது. இரண்டாம் நிலைத் தொற்றில் அசுவுணிகள் மூலம் நச்சுயிரிகள் பரவுகின்றன.
- இதன் அறிகுறிகள் முதல்நிலைத் தொற்று அறிகுறிகளிலிருந்து சில தன்மைகளில் வேறுபடுகின்றன.
|
முதல்நிலைத் தொற்று :
- முதல் இலை வெளி வரும்பொழுதே அறிகுறி காணப்படும். தாக்கப்பட்ட இலையின் அடிப்பாகத்தில் சிறு நரம்புகளை ஒட்டிக் கரும்பச்சை நிறக்கோடுகள் காணப்படும். இக்கோடுகள் இலையின் அடிப்பாகத்தில் மட்டுமே தெரியும்.
- இலையைச் சூரிய ஒளியில் பிடித்துப் பார்த்தால் கரும்பச்சை நிறக்கோடுகளை எளிதில் காணலாம். ஆரம்பத்தில் ஒன்று முதல் பல கோடுகள் தோன்றலாம். இம்மாற்றம் இடையிடையே தோன்றிப் பின் தொடர்ந்து கருநிறக்கோடு போலாகும். இக்கோடுகள் 2.5 செ.மீ அல்லது அதற்கு அதிகமான நீளத்தில் காணப்படும். இவ்வாறான பச்சை நிறக்கோடுகள் நடுகாம்பிலும் காணப்படும்.
- நோயுற்ற இலைகள் வெளுத்தும் சிறுத்தும் இலையின் அகலம் குறைந்தும் காணப்படும். சில சமயங்களில் நோயின் தீவிரத்தால் இலையில் கிளை நரம்புகள் முழுவதும் வெளுத்து காணப்படுவதுடன் இலைப்பரப்பும் வெளுத்துக் காணப்படும்.
- சில சமயங்களில் நடு நரம்பிற்கு இருபுறங்களிலுமுள்ள இலைப் பரப்பு பாதி வரை சுருண்டிருக்கும். மேலும் ஒரு வகையான சவ்வு இலையின் அடிப்பாகத்தில் உண்டாகும். முதல் இலைக்குப் பின்பு தோன்றும் இலைகளிலும் இவ்வாறான அறிகுறிகள் காணப்படும். இவ்வாறான இலைகள் ஒடிவதுடன் இலைக் காம்புகள் சிறுத்தும் காணப்படும்.
- இலை முதிர்ச்சியடையுமுன்பே விறைப்பாகும். இலைகள் நீளத்திலும் அகலத்திலும் தொடர்ச்சியாக சிறியவையாகவே இருக்கும். இலைகள் தோன்றும் பொழுது தலைப்பாகத்தில் நெருக்கமாகத் தோன்றுகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக இலைகள் கொத்தாக நிற்கின்றன. இந்த அமைப்பு முடிக்கொத்து (Bunchy top) போன்ற தோற்றத்தைத் தருவதால் இந்நோய்க்கு இப்பெயர் வந்தது.
- இலையின் ஓரம் மஞ்சளாக மாறி நுனியிலிருந்து அழுகிக் கொண்டு வரும். சில சமயங்களில் இலைக் காம்புகள் மரத்திலிருந்து பெயர்ந்து கீழே விழுந்து விடுகின்றன.
இரண்டாம் நிலைத் தொற்று :
- நச்சுயிரியால் தாக்கப்பட்ட மரத்தின் வளர்ச்சிக்குத் தக்கவாறு அறிகுறிகள் மாறுபடும். ஆரம்ப நிலையில் நோயுற்ற மரங்களில் முதிர்ந்த இலைகள் காய்ந்து விடும். பின்னர் முதல் நிலைத் தொற்றின் மூலம் நோயுற்ற மரத்திற்கும் இதற்கும் மாறுபாடு தெரியாது.
- நோயுற்ற கிழங்குகள் சிறுத்தும் உருண்டையாகவும் வதங்கியும் காணப்படும். நோயுற்ற மரத்தின் தண்டுப்பாகம் கிழங்குடன் ஒட்டியுள்ள இடத்தில் சிறுத்தும் குறுகியும் காணப்படும். வேர்த் தொகுதி முழுவதும் அழுகித் தோன்றும். சில வேர்களில் குங்கும நிறப் பகுதிகள் காணப்படும்.
- நோயுற்ற கிழங்கில் எண்ணற்ற குழிகள் இருக்கும். வேர்கள் நுனியிலிருந்து கிழங்குப் பாகத்தை நோக்கி அழுகிக் கொண்டு வரும்போதே கிழங்கில் பல சிறிய புதிய வேர்கள் உண்டாகும். இவை நாளடைவில் குங்கும நிறமாக மாறி அமிழ்ந்துவிடும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து குலைகள் சிலசமயம் வெளிவருவதில்லை. குலைகள் வெளிவந்தாலும் கூட அவை சிறுத்துக் காணப்படும். தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப்பாகம் பிளந்திருக்கும்.
பரவுதல்
- முடிக்கொத்து நோய், நோயுற்ற கன்றுகளை நடுவதன் மூலமாகப் பரவுகின்றது. ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு பெண்டலோனியா நைக்ரோநெர்வோசா என்ற அசுவுணிப் பூச்சிகளால் பரவுகின்றது.
- இறக்கையுள்ள, இறக்கையில்லாத (Apterous) அசுவுணிக் குஞ்சுகளின் நோய் பரப்பும் திறன் அதிகமாகும். இந்நச்சுயிரியைப் பரப்புவதற்கு வளர்ச்சியுற்ற அசுவுணிகள் 1 1/2 முதல் 2 மணி வரை நோயுற்ற மரத்தில் நோய்ச்சாற்றை உறிஞ்ச வேண்டும். ஆனால் இந்நச்சுயிரியை எடுத்துக் கொள்ள அசுவுணி குஞ்சுப் பருவத்தில் நோயினால் தாக்கப்பட்ட மரத்துடன் 17 மணி நேரம் தொடர்பு கொள்ள வேண்டும்.
- அசுவுணிகள் 13 நாட்கள் வரை நோயினைப் பரப்பிடும் தன்மையைப் பெற்றுள்ளன. அசுவுணியில் நச்சுயிரின் உள்வளர் காலம் (Incubation Period) நாட்டுக்கு ஏற்றவாறு மாறுபடும். ஆஸ்திரேலியாவில் 25 நாட்களும் இலங்கையில் 39 முதல் 59 நாட்களும் இக்காலம் நீடிக்கின்றது.
- அசுவுணிகள் வாழை மரத்தின் அடிப்பாகத்தில் தரையிலிருந்து சில செ.மீ ஆழம் வரையிலும் காணப்படுகிறது. மேல் பட்டையின் வெளிப்புறத்திலும் வாழையில் குருத்து இலைப் பகுதிகளிலும் நடு இலையடிப் பகுதிகளைச் சுற்றிலும் மற்ற இலைக்காம்புகளின் அடியிலும் அசுவுணிக் காணப்படுகின்றன. சாறு மூலமாக இந்நோய் பரவுவதில்லை.
கட்டுப்பாடு
- இந்நோயைக் கட்டுப்படுத்த நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களை அழித்துவிட வேண்டும். நோயினால் பாதிக்கப்படாத கன்றுகளை நடுவதற்குப் பயன்படுத்த வேண்டும். இதற்கு வாழைக்கன்றுகளை வாங்குமிடத்தில் வாழைக் கன்றுகளை வெட்டி எடுக்குமுன் நோய் அறிகுறிகள் இல்லாத கன்றுகளை வாங்க வேண்டும்.
- நோய் பரவியுள்ள பகுதி என்று அறிந்த இடத்திலிருந்து வாழைக் கன்றுகளை வாங்குதல் கூடாது. நோயினால் தாக்கப்பட்ட மரத்திலும் அதனைச் சுற்றிலுமுள்ள ஒரு சில மரங்களிலும் எண்ட்ரின் 0.25 சதம் அல்லது மெட்டாசிஸ்டாக்ஸ் 0.1 முதல் 0.5 சதம் அளவில் தெளிக்க வேண்டும்.
- தாக்கப்பட்ட செடிகளை வெட்டி அழிக்கு முன்பே இப்பூச்சி கொல்லி மருந்தைத் தெளித்து அசுவுணிகள் பரவுவதைத் தடுக்க வேண்டும்.
- நோயினால் பாதிக்கப்பட்ட வாழை மரத்தின் எப்பகுதியையும் நிலத்தில் விட்டு வைக்கக் கூடாது. அவற்றை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியோ களைக்கொல்லியை உபயோகத்தோ அல்லது குழிதோண்டி புதைத்தோ அழிக்க வேண்டும். களைக் கொல்லிகளில் 2,4 டீ என்னும் மருந்தை வெட்டிய மரத்தின் கிழங்கின் மேல் பகுதியில் தரை மட்டத்தில் ஊற்றியோ தெளித்தோ விரைவில் அழிக்கலாம்.
அறிகுறிகள்:
- நோய் தாக்கப்பட்ட கன்றின் வளர்ச்சி குறைந்துவிடும் மற்றும் வாழைக் குழைகளையின் உற்பத்திக் குறைந்துவிடும்
- வாழை இலைகளில் மஞ்சள் நிறக் கோடுகளாவும், இலைகள் மேல் நோக்கி சுருண்டும் மற்றும் மடங்கிக் காணப்படும். இலைகள் கொத்தாக ஒன்றுடுன் ஒன்றாக இணைந்து நிமிர்ந்து நிற்கும்.
- சில சமயங்களில் மைய அழுகல் நோயின் அறிகுறிகள் காணப்படும்
- நோயுள்ள கன்றுகள் மற்றும் அஸ்வினி – அப்ஸ் கஸிபி மூலம் நச்சுயிரிகள் பரவும்
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட நாற்றுகளை அகற்றவும்
- நோயற்ற கன்றுகளை உபயோகிக்க வேண்டும்
- 0.1% பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் நோய் கட்டுப்படுத்தலாம்
9.வாழை வரி நச்சுயிரி நோய்
அறிகுறிகள்:
- நோயின் தன்மைகள் வேறுபட்டு இருக்கும் மற்றும் இவைகள் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு நச்சுயிரிகள் மரபு சார்ந்தவைகளாக இருக்கும்.
- வாழை இலைகளின் மிக அதிகமான நோயின் அறிகுறியான இலைகளில் பச்சை நிற கோடுகள் பாதிக்கப்படும். இவை நாளடைவில் காய்ந்து உதிர்ந்துவிடும். வாழை இலைகளின் பரப்புகள் குறுகியும், அடர்த்தியாகவும் மற்றும் வெடித்தும் காணப்படும்
- வாழைக் கன்றின் வளர்ச்சி குன்றி வாழை குழையின் பகுதிகளை அடைந்துவிடும். பொதுவாக வாழை இலைகளின் அமைப்பு சுருண்டு இருக்கும். மாறுதலாக வாழை இலைகள் நேர்குத்தாகவும், இலைகள் தனி தனியாகவும் மற்றும் தண்டிலிருந்து இலையுரைகள் தனித்துக் காணப்படும்
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட வாழைகளை அகற்றி விட வேண்டும்
- வாழை வரி நச்சுயிரி பாதிக்காதக் கன்றுகளை உபயோகிக்க வேண்டும்
- கிளை நுனி மற்றும் திசு வளர்ப்புக் கன்றுகளின் மூலம் இந்நோய் பரவக்கூடும்
10.வாழை பூ மடல் தேமல் நோய்
அறிகுறிகள்:
- வாழை பூ மடல்களில் தெளிவற்ற நிறத்தில் மற்றும் காய்ந்த கோடுகளுடனும் காணப்படும்.
- முன்நிலை அறிகுறியாக இவை பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்தில் மாறிவிடும் மற்றும் சுருண்ட வடிவக் கோடுகள் இலை காம்பின் வரை பரவிவிடும்.
- நோய் நிலை அதிகரித்து ஆண் பூங்கொத்திற்கான மடல்களில் நிறம் முழுமையாக மாறிவிடும். பழக் குழைகளிலும் பழங்களிலும் இந்நோய் பரவிவிடும்.
- காய்ந்த வாழை மட்டையினை அகற்றினால், அதனில் உள்ள தண்டுப் பகுதியில் நோயின் அறிகுறியாக சுழன்ற வடிவத்தில் கோடுகள் காணப்படும்.
கட்டுப்பாடு:
- நோயின் ஆரம்ப நிலையிலேயே கட்டுபடுத்தி உடனடியாக பாதிக்கப்பட்ட கன்றுகளை அகற்றி விட வேண்டும்.
- நச்சுயிரி தாக்காத இள வாழைக் கன்றுகளை பயன்படுத்தவும்.
|
No comments:
Post a Comment